நான் பொதுவா அதிகம் குறும்படங்கள் பாக்குறதில்ல. சில
குறிப்பிட்ட நண்பர்கள் பாத்துட்டு நல்லாருக்குன்னு சொல்றத மட்டும் அப்பப்ப பாக்குறதுதான்.
அந்தமாதிரி பாத்த ஒரு குறும்படம் Pixel.
ஏலியன்ஸ்,இயந்திரங்கள் படையெடுப்பு, வானிலை மாற்றத்தோட பாதிப்பு இப்படி உலகம் அழியறத, குறிப்பா
நியூயார்க் நகரத்த மட்டும் தனி அக்கரையோட அழிக்கிறத நெறய படங்கள்ல
பாத்துருப்போம். அதுங்க 2 மணிநேரம்
ரூம்போட்டு தெணரத் தெணர அட்டாக் பண்றத, வெறும் ரெண்டே நிமிசத்துல வீடியோ கேம் கேரக்டர்ஸ் பலவிதமான
நிறத்துல வந்து திறமையா செஞ்சி முடிக்கிது. தொட்டதெல்லாம் தங்கம்னு சின்னவயசுல கதை
படிச்சிருக்கேன். அத மாதிரி, இங்க தொடுறதெல்லாம் கலர்கலரா சின்னச்சின்ன சதுரமா மாறுது.
ஒரே வார்த்தையில் சுருக்கமா சொல்லணும்னா, சூப்பர். இதனை எழுதி
இயக்கியிருப்பவர் ஃபிரான்ஸ் இயக்குனர் Patrick
Jean.
குறும்படத்தைக் காண கீழே உள்ள லிங்க் அல்லது வீடியோ இணைப்பினைக் க்ளிக் செய்யவும்.
No comments:
Post a Comment