என்னதான் கம்பியூட்டர், இன்டெர்நெட்னு பொழுது போக்கு சாதனங்கள் வந்தாலும், புத்தகம் படிக்கிற மாதிரி வரவே வராது. ஒரு வாரம் முன்னாடி என்னோட favorite சொர்ணரேகை நாவல திரும்பப் படிச்சேன். பிரபல தமிழ் எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் எழுதின நாவல். 1999ல பிரசுரமானது. என்னடா இவன் 12 வருசத்துக்கு முன்னால வந்த கதையப் பத்தி இப்ப பேசிட்டு இருக்கானேன்னு நெனைக்கலாம். ஆனா, இப்ப படிக்கும்போதும், ஒவ்வொரு தடவையும் முதல்முறை படிச்சப்ப இருந்த த்ரில் மாறவே இல்ல. நான் முதல்முதலா படிச்ச திரில்லர் கதை இதுதான். அதனாலயே இது எனக்கு ரொம்பப் பிடிச்ச நாவல்ல ஒன்னாகிருச்சு.
இந்திரா சாரப் பத்தி உடனே தெரியர மாதிரி சொல்லனும்னா, சன் டிவில வந்த மர்ம தேசம் தொடரோட கதை எழுதினவர். இந்தக் கதைகூட 'விடாது கருப்பு'க்கு அடுத்ததா மர்ம தேசம் - பார்ட் 3 ன்னு தொடர் நாடகமா வந்தது.
இந்திராவோட நாவல்கள்ல பெரும்பாலும், கூடுவிட்டுக் கூடுபாய்ரது, போன சென்மம், அடுத்த சென்மம், இந்தமாதிரி ஏதாச்சும் ஒரு விசயம் அடிப்படையா இருக்கும். அமானுஷ்யம் உண்மையா பொய்யான்னு ஒரு ஆராய்ச்சியோட இருக்கும். உண்மையோ பொய்யோ, படிக்கிறப்ப சுவாரசியத்துக் குறைவில்லாம இருக்கும். அந்த வகையில, சொர்ணரேகையோட கதைய கைரேகை சோதிடத்தை மையமா வச்சி எழுதிருக்காரு இந்திரா சார். கதைல அங்கங்க டுவிஸ்டு வர்றதுனால மேலோட்டமா சொல்றேன். தூக்கு தண்டனைக் கைதி, கைரேகை சோதிட ஆராய்ச்சியாளர், க்ரைம் பிராஞ்ச் இன்ஸ்பெக்டர், டூரிங் தியேட்டர் ஆபரேட்டர் இவங்களுக்குள்ள நடக்குற சம்பவங்கள் தான் மொத்தக் கதையும். வளவளன்னு நெறய பக்கங்கள் எழுதாம, ரொம்பச் சின்னதாவும் இல்லாம, அதே நேரத்துல திரில்லுக்கும் குறைவில்லாம இருக்குறதால படிக்கிறப்ப போர் அடிக்க வாய்ப்புகள் ரொம்ப ரொம்பக் குறைவு.
த்ரில் நாவல் விரும்பி வாசிக்கிறவங்களுக்கு, இதுவும் கண்டிப்பாப் புடிக்கும். அப்டிங்கிறது என் கருத்து. நீங்களும் படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க...
நாவலைப் பற்றி நீங்கள் சொல்லியிருக்கும் விஷயங்கள் நாவலைப் படிக்கத் தூண்டுகிறது...
ReplyDeleteகருத்துக்கு நன்றி. படித்தபின்பு எப்படி இருந்ததென்று மறக்காமல் கூறுங்கள்
Deleteஇந்திரா சௌந்தர்ராஜன் எனக்கு அவ்ளோ இஷ்டம் இல்லை, கொஞ்சம் படிச்சுருக்கேன்.
ReplyDeleteத்ரில்லர் ரொம்ப பிடிக்கும் னா, எண்டமூரி வீரேன்ந்த்ரநாத் படிங்க. "துளசி தளம்", "மீண்டும் துளசி" (சுசீலா கனகதுர்கா)
if you are interested in ghost thrillers, read "Kottayam pushpanath"s novels.
am sorry. but very few of indhra sowndharrajan's books are readable. :)many are crappy. no offense boss!!!
first read thriller novel.. so only i like his novels much though not all.. i have read one of Kottayam Pushpanath. it was good. Thanks for other suggestions too.. I'll read them
Delete